
அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபரும் உலகின் நம்பர் 1 கோடீசுவரருமான எலான் மஸ்க், தனது பிரமாண்ட திட்டங்களுக்கும், அதிரடி முடிவுகளுக்கும் பெயர் பெற்றவர்.
மின்சார கார் தயாரிக்கும் டெஸ்லா, தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் விண்வெளியிலிருந்து இயங்கும் இணைய சேவைக்கான தனியார் விண்கலன்களான ஸ்டார்லிங்க் சேவை உட்பட பல்வேறு முக்கிய நிறுவனங்களை தொடங்கி நிர்வகித்து வரும் மஸ்க், கடந்த வருடம் உலகின் முன்னணி சமூக உரையாடல்களுக்கான வலைதளமான டுவிட்டரையும் சுமார் ரூ.37 ஆயிரம் கோடிக்கு ($44 பில்லியன்) வாங்கினார்.
“அரசின் முக்கிய முடிவுகளை எடுப்பதில் மஸ்க்கின் தாக்கம் இருக்கிறது. விண்வெளி ஆதிக்கம், உக்ரைன் போர், சமூக வலைதளம் கட்டுப்பாடுகள், மின்சார வாகனங்கள் குறித்த சட்டங்கள் உட்பட பல விஷயங்களில் அரசு வகுக்கும் திட்டங்களிலும், எடுக்கும் முடிவுகளிலும் மஸ்க் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துகிறார். உக்ரைன் போரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் விண்கலன்கள் முக்கிய பங்காற்றியது. மஸ்க், டுவிட்டரை விலைக்கு வாங்கிய பிறகு தனக்கு உலக அரங்கில் மிகவும் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனே அறிவித்தார்” என விவரித்து “எலான் மஸ்கின் நிழல் ஆதிக்கம்” என பெயரிட்ட ஒரு நீண்ட கட்டுரையில் அமெரிக்காவின் பிரபலமான “தி நியூயார்க்கர்” எனும் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், “எனது மகன் உயிருக்கு ஆபத்து வரலாம் என அச்சப்படுகிறேன்” என இக்கட்டுரையின் நோக்கத்தை விமர்சித்த எலான் மஸ்கின் தந்தை எர்ரால் மஸ்க் (77) இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பாதுகாவலர்கள் புடைசூழ எலான் மஸ்க் அலுவலகத்தில் வலம் வருவதாக சில மாதங்களுக்கு முன் எக்ஸ் (முன்பு டுவிட்டர்) நிறுவன பணியாளர்கள் சிலர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Compiled: trendnews100.com
World News in Hindi, International News Headlines in Hindi, latest world news in hindi, world samachar World News in Hindi, International News,World News Today, Latest World News in Hindi, Latest World Hindi Samachar,
disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(world news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(world news in hindi)ं।