
69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து தேசிய விருது பெறும் படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தேசிய விருது பட்டியலில் இடம் பிடித்த படக்குழுவினருக்கு திரைத்துறை சார்ந்த பிரபலங்கள், நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க ‘ஜெய்பீம்’, ‘கர்ணன்’, ‘சார்ப்பட்டா பரம்பரை’ போன்ற படங்களுக்கு விருது கிடைக்கும் என நினைத்த ரசிகர்களுக்கு தேசிய விருது பட்டியல் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதனால் நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இயக்குனர் சுசீந்திரன் ‘ஜெய்பீம்’ படத்திற்கு தேசிய விருது ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு விருது கிடைக்காதது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்ற ஆயிரம் கேள்விகள். 5 விருதுகள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்ததற்கு மகிழ்ச்சி வாழ்த்துகள் என்று கூறினார்.
Compiled: trendnews100.com
मनोरंजन, bollywood news, Entertainment News Hindi Today, मनोरंजन समाचार, Entertainment News (एंटरटेनमेंट न्यूज़) In Hindi, बॉलीवुड समाचार, entertainment news in hindi, latest bollywood news and gossip, bollywood gossips, entertainment news bollywood
disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(intertainment news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(intertainment news in hindi)ं।