Cinema

Cinema : விஜய் ஆண்டனி மகள் மறைவு.. லியோ அப்டேட்டை தள்ளி வைத்த படக்குழு

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை, டி.டி.கே சாலையில் வசித்து வருகிறார். 12-ஆம் வகுப்பு படித்து வந்த இவரது மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மீராவின் உடல் சென்னை, ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது பெற்றோர் விஜய் ஆண்டனி – பாத்திமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலானது டி.டி.கே சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி -மீரா

இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திரைப்பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ‘லியோ’ படக்குழு தங்களது சமூக வலைதளத்தில் மீராவுக்கு இரங்கல் தெரிவித்து இன்று வெளியிடவுள்ள போஸ்டரை நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Deepest condolences to @vijayantony sir for the unbearable loss.Our prayers are with you & your family!We respect & believe it’s appropriate to postpone today’s #Leo poster reveal to tomorrow..

— Seven Screen Studio (@7screenstudio)
September 19, 2023

Compiled: trendnews100.com
मनोरंजन, bollywood news, Entertainment News Hindi Today, मनोरंजन समाचार, Entertainment News (एंटरटेनमेंट न्यूज़) In Hindi, बॉलीवुड समाचार, entertainment news in hindi, latest bollywood news and gossip, bollywood gossips, entertainment news bollywood

disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(intertainment news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(intertainment news in hindi)ं।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button