
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சந்தானம் இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்த சுரபி கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைத்துள்ளார். இப்படம் ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து இப்படம் செப்டம்பர் 1-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் இதுவரை ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து இப்படம் சாதனை படைத்துள்ளது. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்ததைக் கொண்டாடும் விதமாக, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மெரினா மாலில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வரும் இடங்களின் மீட்டுருவாக்கம் செய்து பிரத்தியேகமான ஸ்கேரி ரூம் ஜீ5 நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Compiled: trendnews100.com
मनोरंजन, bollywood news, Entertainment News Hindi Today, मनोरंजन समाचार, Entertainment News (एंटरटेनमेंट न्यूज़) In Hindi, बॉलीवुड समाचार, entertainment news in hindi, latest bollywood news and gossip, bollywood gossips, entertainment news bollywood
disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(intertainment news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(intertainment news in hindi)ं।