
முன்னணி இயக்குனரான பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மண்வாசனை’. இந்த படத்தில் பாண்டியன், ரேவதி, வினு சக்ரவர்த்தி, காந்திமதி, விஜயன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்த இந்த படத்திற்கு வைரமுத்து பாடல் வரிகள் எழுதியுள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு’ பாடல் 80 காலக்கட்டங்களில் மிகவும் வரவேற்பை பெற்ற பாடலாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘மண்வாசனை’ திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகளை கடந்துள்ளது.
இந்நிலையில், ‘பொத்தி வச்ச மல்லிக மொட்டு’ பாடலின் பொருள் புரியாமல் இன்னும் புகார் வருகிறது என்று வைரமுத்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றுடன்
நாற்பது ஆண்டுகள்
பாரதிராஜாவின்
மண்வாசனை வெளிவந்து
“ஆத்துக்குள்ள நேத்து
ஒன்ன நெனச்சேன்
வெக்கநெறம் போக
மஞ்சக் குளிச்சேன்”என்ற வரியின்
பொருள் புரியாமல்
இன்னும் புகார் வருகிறது
“என் வெட்கத்தின்
சிவப்பு நிறம் பார்த்து
அது ஆசையின்
அழைப்பென்று கருதி
என் முரட்டு மாமன்
திருட்டுவேலை செய்துவிடக்கூடாது
அதனால் மஞ்சள் பூசி
என் வெட்கத்தை மறைக்கிறேன்”
என்பது விளக்கம்
இந்த நாற்பது ஆண்டுகளில்
காதலின் விழுமியம் மாறியிருக்கிறது
வெட்கப்பட ஆளுமில்லை
மஞ்சளுக்கும் வேலையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இன்றுடன்நாற்பது ஆண்டுகள் பாரதிராஜாவின்மண்வாசனை வெளிவந்து”ஆத்துக்குள்ள நேத்துஒன்ன நெனச்சேன்வெக்கநெறம் போகமஞ்சக் குளிச்சேன்”என்ற வரியின்பொருள் புரியாமல்இன்னும் புகார் வருகிறது”என் வெட்கத்தின்சிவப்பு நிறம் பார்த்துஅது ஆசையின் அழைப்பென்று கருதிஎன் முரட்டு மாமன்… pic.Twitter.com/sLwuble4Et
— வைரமுத்து (@Vairamuthu)
September 16, 2023
Compiled: trendnews100.com
मनोरंजन, bollywood news, Entertainment News Hindi Today, मनोरंजन समाचार, Entertainment News (एंटरटेनमेंट न्यूज़) In Hindi, बॉलीवुड समाचार, entertainment news in hindi, latest bollywood news and gossip, bollywood gossips, entertainment news bollywood
disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(intertainment news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(intertainment news in hindi)ं।