
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் மற்றும் முறையான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு இல்லாததால் பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் அரங்கத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ரசிகர்கள் பலர் சமூக வலைதளத்தில் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினர். மேலும், இந்த நிகழ்ச்சி சமூக வலைதளத்தில் பேசுப்பொருளானது. தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தவறுகளுக்கு வருந்துவதாக தெரிவித்திருந்தர். மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தவறுகளுக்கு பொறுப்பெற்று கொள்வதாக அறிவித்திருந்தனர். இதைத்தொடர்ந்து டிக்கெட் நகலை சரிபார்த்து ரசிகர்களுக்கான கட்டணம் திருப்பி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் வடிவேலு நிகழ்ச்சியில் நடந்த தவறுகள் குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு நானும் போயிருந்தேன். அங்கு மக்கள் பட்ட கஷ்டங்களை நானும் பார்த்தேன். ஏ.ஆர்.ரகுமான் மீது நீங்கள் வைத்திருக்கும் பாசத்தின் உதாரணம் இந்த கோபம். ஏ.ஆர்.ரகுமானை தவறாக நினைக்காதீர்கள்.
அவர் இரண்டு நாட்களாக மன உளைச்சலில் உள்ளார். இசையில் கவனம் செலுத்தியதால் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் அவர் கவனம் செலுத்த தவறிவிட்டார் என்று நினைக்கிறேன். மக்கள் கோபம் கொள்ளாமல் பொறுமை காக்க வேண்டும். ஏ.ஆர்.ரகுமானை யாரும் வெறுத்துவிடாதீர்கள். அவர் பணத்திற்காக மக்களை ஏமாற்றுபவர் அல்ல. நான் எதும் தவறாக பேசியிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று பேசினார்.
Compiled: trendnews100.com
मनोरंजन, bollywood news, Entertainment News Hindi Today, मनोरंजन समाचार, Entertainment News (एंटरटेनमेंट न्यूज़) In Hindi, बॉलीवुड समाचार, entertainment news in hindi, latest bollywood news and gossip, bollywood gossips, entertainment news bollywood
disclaimer : इस पोस्ट में मौजूद किसी भी कंटेंट के लिए Trend News की कोई जिम्मेदारी या दायित्व नहीं है(intertainment news in hindi)ं. पाठकोंहमारे facebook, Twitter पेजों के जरिए हमसे संपर्क कर सकते है(intertainment news in hindi)ं।